×

கோட்டையில் காவி கொடி பறக்கும்: பா.ஜ மாநில தலைவர் நம்பிக்கை

தக்கலை: கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ கிளை மற்றும் அணி பிரிவு பொறுப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் நேற்று  மாநில தலைவர் முருகன் பேசுகையில், பா.ஜ தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியாக மாறி, மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குமரியில் தொடங்கிய மாற்றம் சென்னை வரை தொடர்ச்சியாக உள்ளது. இதற்கு காரணம் மோடியின் நல்லாட்சி. தமிழகத்தில் அதுபோன்ற ஆட்சியை மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கன்னியாகுமரி தொகுதி இடைத்தேர்தல் விரைவில் நடைபெறலாம். அதில் வெற்றிபெறுவோம். மே மாதம் நடைபெறும் தேர்தலில் சென்னை ஜார்ஜ் கோட்டையில் நமது முதல்வர் காவி கொடியேற்றுவார் என்றார்.Tags : Saffron ,fort ,BJP , affron flag flying at the fort: BJP state president hopes
× RELATED இல்லம் தோறும் ஆன்மிகம் குங்கும மகிமை