×

தமிழகத்தில் புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்திவைப்பு; மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்

டெல்லி: தமிழகத்தில் புதிய ரயில்பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது என மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் மக்களவையில் அறிவித்து உள்ளார். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மக்களவையில் மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய ரெயில்வே மந்திரி பியூஷ் கோயல் அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், பொது முடக்க காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் சிறப்பு ரயில்யில்களில் கட்டண வசூல் இல்லை.  மாநில அரசுகள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளிடம் இருந்து மட்டுமே கட்டணம் பெறப்பட்டது என தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் புதிய ரயில் பாதை அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது.  இந்த நிதியாண்டு முடியும் வரை ரயில்வேயில் புதிய பணிகள் தொடங்கப்பட மாட்டாது.  புதிய பாதை அமைக்கும் பணிகள், மாற்று பாதை பணிகள், இருவழித்தட திட்டங்களும் தற்காலிகமாக ரத்து செய்யப்படுகின்றன. எனினும், பாதுகாப்பு சார்ந்த திட்டங்கள், அவசர பணிகள் எதுவும் நிறுத்தி வைக்கப்படவில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.

Tags : Piyush Goyal ,Tamil Nadu , Construction of a new railway line in Tamil Nadu has been suspended; Union Minister Piyush Goyal
× RELATED மகாராஷ்டிராவில் நாளை முதல் புறநகர்...