மாஸ்க் ஷோ

நன்றி குங்குமம் முத்தாரம்

சில நாட்களுக்கு முன் உலகின் முதல் மாஸ்க் கண்காட்சி செக் குடியரசில் சிறப்பாக அரங்கேறியது. ஐரோப்பிய நாடுகளில் கொரோனாவின் தாக்குதலில் இருந்து ஓரளவுக்குத் தப்பித்த ஒரு நாடு செக். தவிர, லாக்டவுனின்போது வீட்டைவிட்டு ஒரு அடி வெளியே வந்தாலும் கூட கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்று சொல்லிய நாடும் செக்தான். ஆரம்பத்தில் கொரோனா தாக்குதல் பரவலாக இருந்தபோது மாஸ்க்கிற்கு பெரும் தட்டுப்பாடு நிலவியது. அதனால் மக்களே தங்களுக்குத் தேவையான மாஸ்க்குகளைத் தயாரிக்கத் தொடங்கிய சம்பவம் டுவிட்டரில் வைரலானது.

இப்போது அங்கே லாக்டவுன் தளர்வு ஏற்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில் நாட்டின் குடிமக்களைக் கவுரவிக்கும் விதமாக மக்கள் தயாரித்த 100 மாஸ்க்குகளை நேஷனல் மியூசியத்தில் கண்காட்சிக்கு வைக்கப் போகிறது செக். ஒரு ஆட்டிச குழந்தை தயாரித்த மாஸ்க்கும் கண்காட்சியில் இடம் பெறுகிறது. மாஸ்க் அணிந்துதான் கண்காட்சியைப் பார்வையிடமுடியும்.

Related Stories: