×

மரியானா ட்ரெஞ்ச்

நன்றி குங்குமம் முத்தாரம்

பாரீஸில் உள்ள ஈபிள் கோபுரத்தைப்  போலவே வடிவமைக்கப் பட்ட கோபுரங்கள் உலகில் பல நாடுகளில் உள்ளன. ஜப்பானில் உள்ள டோக்கியோ டவர், ஈபிள் கோபுரத்தைப் போலவே முழுமையாக வடிவமைக்கப்பட்டது. ஈபிள் கோபுரத்தின் பாதி பாகம், அமெரிக்காவின் நெவாடாவில் லாஸ்வேகாஸ் ஹோட்டலில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பண்டைய எகிப்தியர்கள் வெங்காயத்தை  விரும்பிச் சாப்பிட்டனர். ஆரோக்கியமான உடல்நலத்துக்கு உதவும் சக்தியும், நோய்களைக் குணப்படுத்தும் சக்தியும் வெங்காயத்திற்கு உண்டு என நம்பினர். தங்கள் கல்லறைகளில் வெங்காயத்தின் ஓவியத்தை வரைந்து வெங்காயத்தை சிறப்பித்தனர். ‘ரிங் எ ரிங் ஓ ரோஸஸ்’ என்ற நர்சரிப் பாடல் மத்திய காலத்தில் ஐரோப்பாவைத் தாக்கிய பிளேக் நோயால் இறந்தவர்களின் நினைவாகப் பாடப்பட்டது. சிறு குழந்தைகளை ரோஜாக்களாகவும் எல்லோரும் இறந்ததை All Fall Down எனவும் இப்பாடல் குறிப்பிடுகிறது.குறிப்பிட்ட ஒரு பறவையின் முட்டைகளைச் சேகரிப்பது அல்லது ஆராய்வது Oology என அழைக்கப்படுகிறது.  Bullet என்ற ஆங்கிலச் சொல் Boulette என்ற பிரெஞ்சு சொல்லிலிருந்து பிறந்தது. இதற்கு சிறிய பந்து என்று பொருள்.பண்டைய ரோமானியப் போர்க் கடவுள் மார்ஸ். இவர் ரோமாபுரியின் காவல் தெய்வம். ரோமானியர்கள் செவ்வாய்க் கிரகத்திற்கு மார்ஸ் எனப் பெயரைச் சூட்டி தங்கள் கடவுளுக்கு மரியாதை செலுத்தினார்கள்.

மஞ்சள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தோலின் நிறமும் கண்களும் மஞ்சளாக மாறிவிடும். இதனாலேயே இந்தக் காய்ச்சலுக்கு ‘மஞ்சள் காய்ச்சல்’ என்ற பெயர் வந்தது. இது குடலைத் தாக்கும்போது மஞ்சள் காய்ச்சல் நோய் ஏற்படுகிறது.அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றிய வால்டர் ரீட் என்பவர், மஞ்சள் காய்ச்சல் கொசுக் களின் மூலம் பரவுகிறது என்பதைக் கண்டுபிடித்தார். கப்பலில் மஞ்சள் காமாலை பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால், அந்தக் கப்பலை துறைமுகத்திலிருந்து தனிமைப்படுத்த கப்பலில்  மஞ்சள் கொடி பறக்கவிடப்பட்டது. விண்மீன்கள் மிகக்கடுமையாக வெடிக்கும். அவ்வாறு வெடித்தபின் அதன் ஒளி முன்பு இருந்ததைவிடப் பல நூறு கோடி மடங்கு அதிகரிக்கும். இதை ‘சூப்பர் நோவா’ என அழைக்கின்றனர்.மார்ட்டின் லூதர் கிங்கின் ‘எனக்கு ஒரு கனவு உண்டு’ எனத் துவங்கும் சொற்பொழிவு 1963ம் ஆண்டு அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் ஆப்ரகாம் லிங்கனின் நினைவகத்தில் நிகழ்த்தப்பட்டது. இதில் ‘மார்ட்டின் லூதர் கிங்’ இனப்பாகுபாட்டுக் கொள்கைக்கு எதிராகக் கடுமையாகக் குரல் கொடுத்தார். இதை இருபதாம் நூற்றாண்டில் அமெரிக்காவில் நிகழ்த்தப்பட்ட சொற்பொழிவுகளிலேயே மிகச் சிறந்த சொற்பொழிவாக ஒரு வாக்கெடுப்பில் மக்கள் தேர்ந்தெடுத்தனர். சூரியக் குடும்பத்தின் மிக உயரமான மலை, செவ்வாய் கிரகத்தில் உள்ளது. செவ்வாய் கிரகத்தில் ‘ஒலிம்பஸ் மான்ஸ்’ என்ற பெரிய எரிமலை உள்ளது. இது எவரெஸ்ட் சிகரத்தைவிட மூன்று மடங்கு உயாரமானது. பசிபிக் பெருங்கடலில் உள்ள ‘மரியானா ட்ரெஞ்ச்’ 10.994 கி.மீ ஆழமுள்ளது. இதுவே உலகின் மிக ஆழமுள்ள பகுதியாகும். நாம் எல்லோரும் பூமி என்ற கிரகத்தில் பயணிக்கும் விண்வெளிப் பயணிகள்.

பூமி தன் அச்சில் மணிக்கு 1,07,000 கி.மீ. வேகத்தில் செல்கின்றது. ஆனால் இதை நம்மால் உணர முடியாது.சனிக்கிரகத்திற்கு பல நிலவுகள் உள்ளன. இதில் டைட்டான் பதினைந்தாவது நிலவு. சூரிய மண்டலத்தின் கால நிலைக்கு ஏற்றபடி முழுமையாக வளர்ச்சியடைந்த நிலவு இது. கிழக்கு ஜெர்மனியை கி.பி.829இலிருந்து 842 வரை ஆண்ட தியோபிலஸ் தன்னுடைய தலைமுடி அனைத்தையும் இழந்து மொட்டையாகக் காட்சியளித்தார். அதனால் அவர், ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உட்பட தனது குடிமக்கள் அனைவரும் மொட்டை அடித்துக் கொள்ள வேண்டும் என்று ஆணையிட்டார். இந்த ஆணைக்குக் கீழ்ப்படியாதவர்களுக்கு மரணதண்டனை வழங்கப்படும் என அறிவித்தார். மலேரியாவுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படும் கொய்னா என்ற மருந்து, சின்கோனா மரப்பட்டையிலிருந்து எடுக்கப் படுகிறது. பெரு நாட்டின்மலைப் பகுதிகள் இதன் தாயகம் ஆகும். இப்போது இது இந்தியாவிலும், ஜாவா தீவிலும், ஆப்ரிக்காவின் சில பகுதிகளிலும் விளைகிறது. மலேரியாவைத் தவிர தொண்டை,  சதை  சம்பந்த மான சில நோய்களுக்கும் இது மருந்தாகிறது. வாழை மரம் என்று நாம் அழைத்தாலும் அது மரமல்ல. அது ஒரு மூலிகைச் செடி. ஏனெனில் அதனுடைய தண்டு உண்மையான மரத்திசுக்களைக் கொண்டதல்ல. வாழை ஒரு பழமாகவும், மூலிகையாகவும் கருதப்படுகிறது.

தொகுப்பு: க.ரவீந்திரன்


Tags : Mariana Trench , Mariana Trench
× RELATED ஆபாசப் படங்களை எப்படி புரிந்து கொள்வது?