×

அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு .: பேராசிரியர்கள், ஊழியர்கள் கறுப்பு சின்னம் அணிந்து பணி

சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற எதிர்ப்பு தெரிவித்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கறுப்பு சின்னம் அணிந்து எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை அண்ணா தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகம் என்று அரசு திட்டமிட்டுள்ளது.

திடீரென பெயரை மாற்றுவதால் சர்வதேச பல்கலைக்கழகங்களோடு அண்ணா பல்கலைக்கழகம் புரிந்துள்ள ஒப்பந்தங்கள், ஆராய்ச்சி ஒப்பந்தங்கள் பாதிக்கும் என்பது பேராசிரியர்களின் அச்சமாக உள்ளது. இதனால் பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கறுப்பு சின்னம் அணிந்து பணி செய்து வருகின்றனர்.

பெயரை மாற்றினால் சர்வதேச அளவில் இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் நற்பெயர் பறிபோதிவிடும் என்று பேராசிரியர்கள் கூறியுள்ளனர். இதனால் பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றக்கூடாது என்று கோரிக்கை வைத்துள்ளனர்.


Tags : Professors ,Anna University , Opposition to change the name of Anna University .: Professors, staff work wearing black logo
× RELATED குடியிருப்பு பகுதியில் கொரோனா சிகிச்சை மையம் அமைக்க எதிர்ப்பு