×

அறந்தாங்கியில் பிளக்ஸ் பேனர் கீழே விழுந்து கார் கண்ணாடி உடைந்தது

அறந்தாங்கி: அறந்தாங்கியில் பிளக்ஸ் பேனர் கீழே சாய்ந்ததில் அவ்வழியே சென்ற காரின் கண்ணாடி உடைந்தது. அறந்தாங்கி கட்டுமாவடி முக்கம் பகுதி மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிகம் உள்ள பகுதியாகும். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று காலை கட்டுமாவடி முக்கம் பகுதியில் அமமுக சார்பில் வைக்கப்பட்டிருந்த பிளக்ஸ் பேனர் வீசிய பலத்த காற்றுக்கு திடீரென்று கீழே சாய்ந்தது. இதில் பேனர் சாய்ந்தபோது, அவ்வழியே சென்ற காரின் பின்புற கண்ணாடிமீது விழுந்தது. இதில் காரின் கண்ணாடி உடைந்தது. மேலும் பிளக்ஸ் பேனர் சாலையின் மையப்பகுதியில் கிடந்ததால், வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Aranthangi, Flex Banner
× RELATED களக்காடு மலையடிவாரத்தில் 3வது நாளாக...