×

நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் சிறப்பானவை.. 21ம் நூற்றாண்டிற்கு அவசியமான ஒன்று : பிரதமர் மோடி பெருமிதம்!!

டெல்லி : நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் சிறப்பானவை  என்று பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார். பீகாரில் 14,258 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 350 கிமீ நீளத்திற்கு மேற்கொள்ளப்படும் 9 நெடுஞ்சாலை திட்ட பணிகளுக்கு பிரதமர் மோடி காணொளி காட்சி வாயிலாக இன்று அடிக்கல் நாட்டினார்.இதேபோல், பீகாரில் 45,945 கிராமங்கள் இன்டர்நெட் வசதி பெறும் வகையிலான கண்ணாடி இழை இன்டர்நெட் சேவை வழங்கும் திட்டத்தினையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பீகாரில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, நாடு முழுவதும் குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறையும் அரசு கொள்முதல் நிலையங்களும் தொடரும் என்று கூறினார். எப்பொழுதும் போல் வேளாண் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்றும் உறுதி அளித்தார்.தற்போதைய கால கட்டத்திற்கு ஏற்றவாறு விவசாயத் துறையை மறு சீரமைக்கவே மத்திய அரசு 3 வேளாண் மசோதாக்களை கொண்டு வந்ததாக கூறினார். கொரோனா போன்ற பெருந்தொற்று காலகட்டத்திலும் கூட வரலாற்றில் இல்லாத அளவிற்கு வேளாண்ப் பொருட்களை மத்திய அரசு கொள்முதல் செய்வதாகவும் அதிக அளவிலான பணம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டதாகவும் பிரதமர் கூறினார்.

மேலும் பேசிய மோடி, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் சட்டங்கள் முக்கியமானவை ஆகும்.விவசாய சீர்திருத்தங்களின் பயன்களை ஏற்கனவே விவசாயிகள் அனுபவிக்கத் தொடங்கிவிட்டனர். பயறு வகைகளை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 25 சதவீதம் கூடுதல் விலை கிடைத்துள்ளது. வேளாண் சட்டங்களால் விளைபொருட்கள் சந்தைகள் மூடப்படமாட்டாது. வேளாண் சந்தைகள் மூடப்பட்டுவிடும் என்று எதிர்க்கட்சியின் கூறுவது பொய். வேளாண் சட்டம் மூலம் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை எங்கும் சுதந்திரமாக வர்த்தகம் செய்யலாம். என்றார்.


Tags : parliament ,Modi , Parliament, Agricultural Laws, Special., Prime Minister Modi, Proud
× RELATED இந்தியா அமல்படுத்தியுள்ள...