×

தெலுங்கானா-சத்தீஸ்கர் மாநில எல்லையில் நடைபெற்ற என்கவுன்டரில் மாவோயிஸ்ட் இருவர் சுட்டுக்கொலை

தெலுங்கானா:  தெலுங்கானா-சத்தீஸ்கர் மாநில எல்லையில் நடைபெற்ற என்கவுன்டரில் மாவோயிஸ்ட் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். தெலுங்கானா மாநிலத்தில் உள்ள எல்லை மாவட்டங்களில் நுழைய சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த மாவோயிஸ்ட்கள் முயன்றுள்ளனர். இந்த தகவல் அறிந்த தெலுங்கானா கக்கன்ஜி நகர் போலீசார் சிறப்பு அதிரடி போலீசாருடன் இனைந்து காண்காணிப்பு பணியில் ஈடுப்பட்டு வந்தனர்.

அப்போது காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சிலர் சுட்டனர். இந்த தாக்குதலுக்கு காவல்துறை சார்பில் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் நீடித்த துப்பாக்கி சண்டையில் சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த பிரபல மாவோயிஸ்ட் சுகளு என்பவர் உள்ளிட்ட இரண்டு பேர் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

நிகழ்விடத்தில் இருந்து இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்த தெலுங்கானா போலீசார், தப்பியோடிய மற்ற மாவோயிஸ்ட்கள் தேடி வருகின்றனர்.


Tags : Maoists ,border ,Chhattisgarh ,Telangana , Maoists shot dead in encounter: Heavy fighting on Telangana-Chhattisgarh border
× RELATED காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில்...