×

மராட்டியத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து : இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் பலி.. 25 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அச்சம்!!

மும்பை : மராட்டியத்தில் 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் இடிபாடுகளில் சிக்கிய 10 பேர் உயிரிழந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தின் பிவாண்டி பகுதியில் அமைந்துள்ள பட்டேல் காப்பாவுண்ட் என்ற இடத்தில் 3 மாடி கட்டிடம் அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது. அதிகாலை 3..30 மணிக்கு கட்டிடம் இடிந்து விழுந்ததால் அயர்ந்து தூங்கி கொண்டு இருந்த மக்கள் இடிபாடுகளில் சிக்கினர். கட்டிட இடிபாடுகளில் 20 முதல் 25 பேர் வரை சிக்கியுள்ளதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கட்டிடம் இடிந்து விழுந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் விரைந்து வந்த தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இடிந்து விழுந்த கட்டிடத்தில் 21 வீடுகள் இருந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே இடிப்பாடுகளில் சிக்கிய 10 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேரை தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர். தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 20 பேரை உள்ளூர் மக்களே பத்திரமாக மீட்டனர்.இதே போன்று கடந்த சில வாரங்களுக்கு முன்பு  ராய்காட்டில் 5 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது.இந்த விபத்தில் சுமார் 20 பேர் பலியானது குறிப்பிடத்தக்கது.


Tags : building ,Marathaland , World, corona, healed, number, rise
× RELATED கட்டி முடித்து 10 மாசமாச்சு... பொது...