×

3.12 கோடி பேர் பாதிப்பு.. 2.28 கோடி பேர் ஓகே : உலகளவில் கொரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை 9.65 லட்சத்தை தாண்டியது!!

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 3 கோடியே 12 லட்சமாக அதிகரித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் 3,12,30,103 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 74,43,625 பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,245 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2,28,21,437 குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9,65,041 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

அமெரிக்கா -7,004,768     
இந்தியா - 5,485,612     
பிரேசில் - 4,544,629     
ரஷியா - 1,103,399
கொலம்பியா - 765,076     
பெரு - 762,865     
மெக்சிகோ - 697,663
தென் ஆப்பிரிக்கா - 661,211
ஸ்பெயின் - 659,334
அர்ஜெண்டினா - 5,77,338

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா - 204,118
பிரேசில் - 136,895
இந்தியா - 87,909
மெக்சிகோ - 73,493     
இங்கிலாந்து - 41,777     
இத்தாலி - 35,707
பெரு - 31,369
பிரான்ஸ் - 31,285     
ஸ்பெயின் - 30,495     
ஈரான் - 24,301
கொலம்பியா - 24,208

கொரோனாவில் இருந்து அதிக எண்ணிக்கையில் குணமடைந்தவர்களை கொண்ட நாடுகள்:-

அமெரிக்கா - 4,250,140
இந்தியா - 4,392,650
பிரேசில் - 3,851,227
ரஷியா - 909,357
கொலம்பியா - 633,199
தென் ஆப்ரிக்கா - 590,071     
பெரு - 607,837     
மெக்சிகோ -499,302    


Tags : corona deaths , World, corona, healed, number, rise
× RELATED உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்...