×

சூப்பர் ஓவரில் வீழ்ந்தது பஞ்சாப்: ஸ்டாய்னிஸ் அதிரடி அரைசதம்

துபாய்: சூப்பர் ஓவரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 1 ரன் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தியது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசியது. டெல்லி தொடக்க வீரர்களாக பிரித்வி ஷா, தவான் களமிறங்கினர். தவான் ரன் ஏதும் எடுக்காத நிலையில் பரிதாபமாக ரன் அவுட்டாகி வெளியேறினார். பிரித்வி 5 ரன் எடுத்து ஷமி பந்துவீச்சில் ஜார்டன் வசம் பிடிபட்டார். இந்த நிலையில், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் - ரிஷப் பன்ட் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டது.

டெல்லி 16.1 ஓவரில் 96 ரன்னுக்கு 6 விக்கெட் இழந்து தடுமாறிய நிலையில், மார்கஸ் ஸ்டாய்னிஸ் பவுண்டரியும் சிக்சருமாகத் தூக்கி பஞ்சாப் பந்துவீச்சை பஞ்சாய் பறக்கவிட்டார். அதிரடியாக அரை சதம் அடித்து அசத்திய ஸ்டாய்னிஸ் 53 ரன் (21 பந்து, 7 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ரன் அவுட்டானார். டெல்லி கேப்பிடல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 157 ரன் குவித்தது. ரபாடா (0), நோர்ட்ஜே 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். பஞ்சாப் பந்துவீச்சில் முகமது ஷமி 4 ஓவரில் 15 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். காட்ரெல் 2, ரவி பிஷ்னோய் 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவரில்157 ரன் எடுத்து ஆட்டமிழந்தது. இதில் அதிகபட்சமாக மயாங் அகர்வால் 60 பந்தில் 89 ரன்கள் எடுத்து அவுட்டனார். 20 ஓவர் முடிவில் இரண்டு அணிகளும் 157 ரன் எடுத்ததால் போட்டி டையில் முடிந்தது. இதையடுத்து நடந்த சூப்பர் ஓவரில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரபாடா ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 2 ரன் எடு்த்தனர். ராகுல் 2 ரன்னிலும், பூரன் ரன் அடிக்காமல் ஆட்டமிழந்தார். இதையடுத்து 3 ரன் அடித்தால் வெற்றி என்ற நிலையில் களமிங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி ரிஷபந்த் 2 ரன் அடித்தார். முகமது சமி எக்ஸ்ட்ரா ரன் கொடுத்ததால் 4 பந்துகள் மீதம் இருக்கையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

Tags : Punjab , Punjab fell in Super Over: Steinis Action Fifty
× RELATED 3வது வெற்றிக்காக முட்டி மோதும் மும்பை – பஞ்சாப்