மாநகர செய்தி துளிகள்...

ரூ27.50 லட்சம் மோசடி: தனக்கு சொந்தமான வீட்டை லீசுக்கு விடுவதாக கூறி, சிட்கோ நகரை சேர்ந்த மோகன், சபினாபேகம், சத்தியவாணி, செல்வி ஆகிய 4 பேரிடம் ₹27.50 லட்சத்தை பெற்று ஏமாற்றிய வில்லிவாக்கம் மூர்த்தி நகர் ஜார்ஜ் டவர் குடியிருப்பு பகுதியை சேர்ந்த காட்வினை போலீசார் தேடி வருகின்றனர்.

கொள்ளையர்கள் சிக்கினர்: சென்னையில் தொடர் செல்போன் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஐஸ்அவுஸ் பகுதியை சேர்ந்த முனீர் பாஷா (23), ரோட்டரி நகரை சேர்ந்த ரியாஷ் பாஷா (24) ஆகியோரை போலீசார் கைது ெசய்தனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன்கள், பைக் பறிமுதல் செய்யப்பட்டன.

கஞ்சா பறிமுதல்: மயிலாப்பூர் பறக்கும் ரயில் நிலையம் மற்றும் முண்டகக்கண்ணியம்மன் கோயில் அருகே பைக்கில் கஞ்சா விற்ற ராயப்ேபட்டை லாயிட்ஸ் சாலையை சேர்ந்த சபாசக்தி (26), மயிலாப்பூர் கச்சேரி சாலையை சேர்ந்த யாசர் (21) ஆகிய இருவரை போலீசார் கைது செய்து, 3.4 கிலோ கஞ்சா மற்றும் 2 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.

வீட்டில் நகை திருட்டு:  மூவரசம்பட்டு பாரதியார் தெருவை சேர்ந்த இஎஸ்ஐ மருத்துவமனை ஊழியர் மூர்த்தியின் (60) வீட்டு பூட்டை உடைத்து 4 சவரன் நகை, வெள்ளி பொருட்கள், மற்றும் செல்போனை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.

5 சவரன் செயின் மீட்பு: ஈஞ்சம்பாக்கம் சோழமண்டல் ஆர்ட்டிஸ்ட் வில்லேஜில் வசித்து வரும் கீதா (58) நடை பயிற்சி செய்தபோது, அவரது கழுத்தில் கிடந்த 5 சவரன் செயினை பறித்து சென்ற செம்மஞ்சேரி குடிசை மாற்று வாரிய குடியிருப்பை சேர்ந்த நவமணி (எ) நடராஜ் (28) மற்றும் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து, செயினை மீட்டனர்.

தொழிற்சாலையில் தீவிபத்து: மணலி புதுநகர் அடுத்த விச்சூர் சிட்கோ தொழிற்பேட்டையில் உள்ள மாத்திரைகளுக்கான மூலப்பொருள் தயாரிக்கும் ரசாயன தொழிற்சாலையில் நேற்று பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். தீவிபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

போக்சோவில் வாலிபர் கைது:  புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலித்து, திருமண ஆசை வார்த்தை கூறி, கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வியாசர்பாடியை சேர்ந்த அலெக்ஸை (22) போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

வாலிபர் தற்கொலை: புளியந்தோப்பு திருவிக நகர் 4வது குறுக்கு தெருவை சேர்ந்த மதுசூதன ராவ் (29) மது போதைக்கு அடிமையானதால் மன உளைச்சலில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

போலி வயர் விற்பனை: பூக்கடை கோவிந்தப்ப நாயக்கன் தெருவில் உள்ள ஒரு எலக்ட்ரிக்கல் கடையில் பிரபல நிறுவனத்தின் பெயரில் போலி வயர்களை விற்பனை செய்த குந்தன் பிரதாப் சிங்கை (24) போலீசார் கைது செய்தனர்.

பைக் திருடர்கள் கைது: சென்னையில் வீடுகளின் முன்பு நிறுத்தப்படும் விலை உயர்ந்த பைக்குகளை திருடி வெளி மாவட்டங்களில் விற்பனை செய்து வந்த எண்ணூரை சேர்ந்த அரவிந்தன் (24), கோடம்பாக்கத்தை சேர்ந்த சாய்கிருஷ்ணன் (எ) அப்பு (21) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

போதைக்கு மாத்திரை விற்பனை: வலி நிவாரணி மாத்திரைகளை போதைக்காக விற்பனை செய்து வந்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த கல்லூரி மாணவன் விக்னேஷை (22) போலீசார் கைது செய்தனர்.

பழைய குற்றவாளி சுற்றிவளைப்பு: வேலை செய்யும் வீடுகளில் நோட்டமிட்டு பணம், செல்போன், நகைகளை திருடி வந்த கோட்டூர் பகுதியை சேர்ந்த பெயின்டரும், பழைய குற்றவாளியுமான சசிகுமாரை (42) போலீசார் கைது செய்தனர்.

Related Stories: