×

கால்வாய் அடைப்பால் கழிவுநீர் தேக்கம்: அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் போராட்டம்

திருவொற்றியூர்: மாதவரம் மண்டலம் 26வது வார்டுக்கு உட்பட்ட சக்திவேல் நகர், சாமி நகர், திருமலை நகர், சாஸ்திரி நகர் பிரதான சாலை போன்ற பகுதிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு பாதாள சாக்கடை திட்டம் சமீபத்தில் கொண்டுவரப்பட்டது. ஆனால், இதற்கான பணிகள் முறையாகவும், முழுமையாகவும் நடைபெறாததால், பல இடங்களில் குழாய்களில் உடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், சாஸ்திரி நகர் பிரதான சாலையில் பாதாள சாக்கடையில் கடந்த சில நாட்களாக அடைப்பு ஏற்பட்டு கழிவுநீர் தேங்கியது.

இதுகுறித்து அப்பகு மக்கள் மாதவரம் மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, எனகூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று சாஸ்திரி நகர் பிரதான சாலையில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, கால்வாய் அடைப்பை சரி செய்யாத மண்டல குடிநீர் வழங்கல் வாரிய அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Tags : protest , Sewage stagnation due to canal blockage: Public protest condemning the authorities
× RELATED அதிகாரிகளின் அலட்சியப்போக்கால்...