முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு ஆவணங்களை உடனே வழங்க வேண்டும்: தகவல் ஆணையர் உத்தரவு

திருவனந்தபுரம்: முல்லை  பெரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை உடனடியாக வழங்கும்படி கேரள நீர்பாசனத்துறைக்கு தகவல்  உரிமை ஆணையாளர் உத்தரவிட்டுள்ளார். கேரளாவில் தகவல்  அறியும் உரிமை சட்ட கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பினு. வக்கீலாக  உள்ளார். முல்லை ெபரியாறு அணை பாதுகாப்பு தொடர்பான ஆவணங்களை தகவல் அறியும்  உரிமை சட்டத்தின் கீழ் கேட்டு இவர் விண்ணப்பித்தார். ஆனால், பல மாதங்கள் கடந்தும் கேரள நீர்ப்பாசனத்துறையில் இருந்து எந்த தகவலும்  வழங்கப்படவில்லை.

இதையடுத்து, மாநில தகவல் உரிமை ஆணையாளர்  சுதாகரிடம் பினு புகார் செய்தார். இதையடுத்து, முல்லை பெரியாறு அணை பாதுகாப்பு  தொடர்பான அனைத்து ஆவணங்களையும் (அணை உடைந்தால் ஏற்படும் விளைவுகள் தவிர) 15  நாட்களுக்குள் வழங்கும்படி, கேரள நீர்ப்பாசனத் துறையின் மக்கள் ெதாடர்பு  அதிகாரிக்கு சுதாகர் உத்தரவிட்டுள்ளார். இது தவிர, மனுதாரருக்கு தகவலை வழங்க  மறுத்த அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: