விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும்: ரவீந்திரநாத், சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலாளர்

பேரிடர் நேரத்தில் மக்களுக்கு தேவையானவற்றை கொள்முதல் செய்து அதை கொடுக்க வேண்டும். ஆனால், இந்த நேரத்தில் ஆட்சியாளர்கள் அதிக அளவில் கொரோனா பெயரை சொல்லி ஊழலில் ஈடுபட்டிருப்பதற்கு வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. இதேபோல், பேரிடர் காலங்களில் டெண்டர் கோரி ஒரு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று அவசியம் இல்லை. டெண்டர் கோராமல் நேரடியாக எதையும் செய்யலாம். இந்த சலுகையை ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி முறைகே்ட்டில் ஈடுபட்டு வருகின்றனர். டெண்டர் கோர வேண்டாம் என்பதால் மருந்துகள், கட்டில்கள், மெத்தைகள், படுக்கை, தலையனை போன்றவைகளை சரியான கணக்கு காட்டாமல் வாங்கி அதில் ஊழலில் ஈடுபட்டிருப்பதற்கான வாய்ப்புகள் தான் உள்ளது.

பேரிடர் நேரத்தில் டெண்டர் விட்டு எந்த ஒரு விஷயத்தையும் உடனடியாக செய்ய முடியாது.  இதை பயன்படுத்தி கொரோனா காலத்தில் மிகப்பெரிய  ஊழல் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார்கள். காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பது  போல் கொரோனா காலத்தை பயன்படுத்தி ஊழல் நடைபெற்றுள்ளது. அதேபோல், கொரோனா முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட உணவில் ஏராளமான செலவு செய்யப்பட்டதாக கணக்கு காண்பிக்கிறார்கள். ஆனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கும் மற்றும் சமூக நலக்கூடங்களில் இருந்த ஆதரவற்றவர்களுக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் உணவுகள் சமைத்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

அப்படிப்பட்ட சூழலில் இதையே அரசு தான்  செலவு செய்ததாக ஒரு போலி கணக்கை காண்பிக்கிறார்கள். தனியார் அமைப்புகள் செலவு செய்ததை எல்லாம் அரசு தான் செலவு செய்துள்ளதாக கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த முறையில் பலவித முறைேகடுகள் நடைபெற்றிருக்கும். எனவே, கொரோனா பேரிடர் காலத்தை பயன்படுத்தி நடைபெற்ற ஊழலை வெளியே  கொண்டுவர வேண்டும். அது மிக முக்கியமானது. கொரோனா பேரிடர் கால அசாதாரண நிலையை பயன்படுத்தி நடத்தப்பட்ட முறைகேடுகளை விசாரிக்க ஒரு விசாரணை கமிஷனை அமைக்க வேண்டும். அதில், முதல்கட்டமாக 7 ஆயிரம் கோடிக்கு என்னென்ன செலவு செய்தார்கள் என்பதை தனித்தனியாக விளக்கி தெரிவிக்க வேண்டும்.

கொரோனாவிற்கு எவ்வளவு செலவு செய்யப்பட்டது என்பது குறித்த வெள்ளை அறிக்கையை இந்த ஆட்சியாளர்கள் வெளியிட மாட்டார்கள். ஊழல் செய்தது வெளிப்படையாக தெரிந்துவிடும் என்பதால் அதை செய்யமாட்டார்கள். இந்த அரசு வெள்ளை அறிக்கையை வெளியிடவில்லை என்றால் முறையான விசாரணை கமிஷன் அமைத்து யார், யார் ஊழலில் ஈடுபட்டார்களோ அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டரீதியான தண்டனையை அவர்களுக்கு வாங்கிக்கொடுக்க வேண்டும். ஊழல் செய்த பணத்தை மீட்க வேண்டும்.

கொரோனா முகாம்கள் மற்றும் மருத்துவமனைகளில் வழங்கப்பட்ட உணவில் ஏராளமான செலவு செய்யப்பட்டதாக கணக்கு காண்பிக்கிறார்கள். ஆனால், மருத்துவமனையில் இருந்த நோயாளிகளுக்கும் மற்றும் சமூக நலக்கூடங்களில் இருந்த ஆதரவற்றவர்களுக்கும் தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலமாகவும், பல்வேறு அமைப்புகள் மூலமாகவும் உணவுகள் சமைத்து இலவசமாக வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: