கொரோனா நோயாளிக்கு செலவான விவரத்தை வெளியிட வேண்டும்: டாக்டர் எழிலன், பொதுநல மருத்துவர்

தமிழக அரசு கொரோனாவிற்கு 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது என்று கூறுவதை ஒப்புக்கொள்ளமுடியாது. ஒவ்வொரு பிரிவிற்கும் எவ்வளவு செலவு செய்தார்கள் என்பதை கூற வேண்டும். எவ்வளவு பணியாளர்களை தேர்வு செய்துள்ளார்கள். தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை உள்ளிட்ட விவரம் எப்படி நடந்தது, எங்கே நடந்தது என்பது குறித்து தெரிவிக்க வேண்டும். கொரோனாவிற்கு தேவையான மருந்துகளை விடுத்து தேவையில்லாத மருந்துகளை கொள்முதல் செய்வதாக எங்களுக்கு தகவல் வந்துள்ளது. சில சர்வதேச நாடுகள் தேவையில்லாத மருந்துகளை தவிர்த்துள்ளார்கள்.

ஆனால், தமிழக அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு அந்த மருந்துகள் கொடுக்கப்பட்டு வருகிறது. சந்தேகத்தின் அடிப்படையிலான மிகவும் விலை அதிகம் உள்ள மருந்துகள் கொடுக்கப்படுகிறது. ஆனால், ரெம்டிசிவிர் போன்றவை தேவையான மருந்துகளாக உள்ளது. மருந்துகள் வாங்கும்போது எவ்வளவு வாங்கப்பட்டுள்ளது. எந்த நிறுவனத்திடம் இருந்து வாங்கப்பட்டது, மார்க்கெட் விலையில் தகுந்த விலையில் உள்ளதா என்பதை பார்க்க வேண்டும். அவசர நிலையை ஒரு காரணமாக வைத்து இதை செய்துள்ளார்களா என்று பார்க்க வேண்டும். ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம் என்றால் அதை அவசர நிலையாக எடுத்துக்கொள்ளலாம்.

ஆனால், 7 மாதமாக தொடர்ந்து கொள்முதல் செய்தால் எவ்வளவு என்ற விவரங்களை வெளியிட வேண்டும். அதில் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக உணவு கொடுக்கப்படும். கொரோனா சூழலில் அரசு மருத்துவமனைகளில் என்ன உணவுகள் கொடுக்கப்பட்டது, ஒரு நோயாளிக்கு உணவுக்காக கொடுக்க எவ்வளவு செலவு செய்யப்பட்டது?  கொரோனா நோயாளி ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு செல்லும்போது அவருக்கு 14 நாட்களுக்கு தேவையான மருந்துகள் கொடுக்கப்படும். அந்த மருந்துகளுக்கு தேவையான விவரங்களையும் வெளியிட வேண்டும். ஒவ்வொரு நோயாளிக்கும் எவ்வளவு செலவு ஆகியுள்ளது என்று தெரிவித்தால்,

அரசு வெளியிட்ட பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையுடன் அதை கணக்கிட்டு பார்க்கும்போது அரசு எவ்வளவு செலவு செய்துள்ளது் என்பதை  கண்டறிய முடியும். வெளிப்படையாக வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். ரேபிட் டெஸ்ட் கிட்டில் ஆரம்பித்து தொடர்ந்து ஊழல் செய்துள்ளார்கள். வெள்ளை அறிக்கை வெளியிட்டால் அதை பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டு மருந்து, கிட், பெட், சிலிண்டர் போன்றவைகளை எவ்வளவுக்கு வாங்கினார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். அதனால்தான் தனியாக பிரித்து சொல்ல  தயங்குகிறார்கள். அப்படி சொல்லும் போது அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்துவிடும். அவசர காலம், பேரிடர் காலம் என்று கூறி இவர்கள் தப்பித்துவிட முடியாது.

7 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளார்கள். ஆனால், இவர்களால் கொரோனா பரவல் வீரியத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. தமிழகத்திற்கு இணையான மருத்துவ கட்டுமானங்கள் உள்ள நாடுகள் கொரோனாவை சரிசெய்துவிட்டன. ஆனால், இங்கு கொரோனாவை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், ₹7 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்ததே வீண். எனவே, ₹7 ஆயிரம் கோடிக்கான விவரம், கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனி நபருக்கு எவ்வளவு செலவாகியது என்பது குறித்த கணக்கையும் வெளியிட வேண்டும். ரேபிட் டெஸ்ட் கிட்டில் ஆரம்பித்து தொடர்ந்து ஊழல் செய்துள்ளார்கள். வெள்ளை அறிக்கை வெளியிட்டால் அதை பிற  மாநிலங்களுடன் ஒப்பிட்டு மருந்து, கிட், பெட், சிலிண்டர் போன்றவைகளை  எவ்வளவுக்கு வாங்கினார்கள் என்பதை தெரிந்துகொள்ளலாம். குட்டு  வெளிப்பட்டுவிடும். அதனால்தான் தனியாக பிரித்து எந்த விவரங்களையும் சொல்லத் தயங்குகிறார்கள்.

Related Stories: