கொரோனா தடுப்பு பணிகளுக்கான செலவு கணக்கில் தகிடுதத்தம்: எங்கே போனது ரூ7 ஆயிரம் கோடி?... வெள்ளை அறிக்கை வெளியிடுமா தமிழக அரசு

கொரோனா நோய்த்தொற்று தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டிவிட்டது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்தநிலையில் தளர்வுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா நோய்த் தொற்றை தடுப்பதற்கான முயற்சியில் அரசின் நடவடிக்கை தொய்வாக உள்ளது என பரவலாக புகார்கள் வருகின்றன. இந்த நிலையில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக இதுவரை 7 ஆயிரத்து 167  கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தமிழக அரசு கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நோய்த் தொற்று தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே கொரோனா நோய்த் தடுப்பு உபகரணங்கள் வாங்கியதில் பல்வேறு முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

கொரோனா தொடர்பான எந்த கொள்முதலும் வெளிப்படையாக இல்லாமல் நிழல் நடவடிக்கையாகவே உள்ளன. இந்தப் பின்னணியில் கொரோனா செலவுக் கணக்கு சரியானதாக இருக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது. உபகரணங்கள் கொள்முதல், நியமனங்கள், மருத்துவமனை மற்றும் ஆய்வகங்கள் வாரியாக கொரோனா சோதனைகள், நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், சிகிச்சை பெற்று வீடு திரும்பியோர், இறந்தோர், கொரோனா பேரிடருக்கு மாநில நிதி மற்றும் பேரிடர் நிதியில் இருந்து செலவழிக்கப்பட்ட தொகை, கொரோனாவால் மாநிலத்திற்கு ஏற்பட்ட நிதி இழப்பு, பொருளாதார, தொழில் வீழ்ச்சி ஆகியவை குறித்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என பேரவையில் திமுக தலைவர் வலியுறுத்தினார்.

 

இதன் தொடர்ச்சியாகவே வேறு வழியின்றி பொத்தாம்பொதுவாக ஒரு செலவுக் கணக்கை அரசு கூறியிருக்கிறது. ஆனால் கொரோனா தொடர்பான செலவுகள் அனைத்தையும் எந்த ஒளிவுமறைவுமின்றி வெளிப்படையாக வெள்ளை அறிக்கையில் தெரிவிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் அனைத்தும் வற்புறுத்தி வருகின்றன. அரசு இதை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து மவுனம் சாதித்து வருகிறது. இந்த விவகாரம் குறித்து நான்கு பேர் இங்கு அலசுகின்றனர்.

Related Stories: