இந்தியாவில் தொடர்ந்து 2வது நாளாக பாதிக்கப்படுபவர்களை விட குணமானவர்கள் அதிகரிப்பு: கொரோனா சிகிச்சையில் திருப்பம்

புதுடெல்லி: நாடு முழுவதும் தொடர்ந்து 2வது நாளாக கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரை விட, சிகிச்சை பெற்று குணமடையும் நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டோர் குறித்த விவரங்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 94,612 கொரோனா நோயாளிகள் சிகிச்சை பெற்று குணமடைந்து உள்ளனர். இதன் மூலம், குணமடைந்தோர் எண்ணிக்கை 79.68 சதவீதமாக உயர்ந்துள்ளது.

* அதே நேரத்தில் நாட்டில் புதிதாக 92,605 பேர் தொற்றால் பாதித்துள்ளனர். இதனால், நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 54 லட்சத்து 619 ஆக அதிகரித்துள்ளது.

* நாட்டில் தொடர்ந்து 2வது நாளாக பாதிக்கப்பட்டவர்களை விட, குணமான நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது.

*  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 1133 பேர் இறந்துள்ளனர். இதன் மூலம், மொத்த உயிரிழப்பு 86,752 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு எண்ணிக்கை 1.61 சதவீதமாக குறைந்துள்ளது.

* நாடு முழுவதும் இதுவரையில் கொரோனா பாதித்த 43 லட்சத்து 3,043 பேர் சிகிச்சையில்  குணமடைந்து உள்ளனர். மேலும், 10 லட்சத்து 10 ஆயிரத்து 824 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* நேற்று முன்தினம் ஒரே நாளில் நாடு முழுவதும் 12 லட்சத்து 6 ஆயிரத்து 806 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

* இதுவரை நாடு முழுவதும் 6 கோடியே 36 லட்சத்து 61 அயிரத்து 60 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Related Stories: