×

சொல்லிட்டாங்க...

ஊழல் வழக்குகளில் இருந்து பாஜவின் பாதுகாப்பு வளையத்திற்குள் நின்று தற்போது தப்பித்துக் கொள்ளலாம். அதன் பிறகு மக்கள் எனும் மகேசன் தரப் போகும் தண்டனையிலிருந்து நிச்சயம் தப்பிக்க முடியாது.
- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்.

மத்திய பாஜ அரசானது தனது பணக்கார நண்பர்களை வேளாண் துறைக்குள் அழைத்து வருவதில் ஆர்வமாக இருக்கிறது.
- காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி.

தமிழகத்தில் ஊடகங்கள் அதிமுகவுக்கு எதிராக செயல்படுகின்றன. நாங்கள் வெள்ளைக்காரனுக்கே பயப்பட்டதில்லை. ஜெயில் எல்லாம் எங்களுக்காக கட்டப்பட்டது.
- அமைச்சர் செல்லூர் ராஜூ .

பெரியாரின் நல்ல கொள்கையை ஏற்றுக்கொள்வோம். ஆனால் கடவுள் இல்லை என்பதை ஏற்க முடியாது.
- தமிழக பாஜ தலைவர் முருகன்.

Tags : MK Stalin, Priyanka Gandhi, Cellur Raju, Murugan
× RELATED தேனியில் ஓபிஎஸ் -செல்லூர் ராஜூ ரகசிய சந்திப்பு