×

காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம்: ஆவடி நாசர் அறிவிப்பு

திருவள்ளூர்: ஆன்லைன் வாயிலாக திமுகவில் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான ஆலோசனை கூட்டம் இன்று நடக்கிறது. திருவள்ளூர் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவடி சா.மு.நாசர் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க எல்லோரும் நம்முடன் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் ஆன்லைன் மூலம் 10 ஆயிரம் உறுப்பினர்களை சேர்ப்பது சம்பந்தமாக இன்று (21ம் தேதி) காணொலி காட்சி வாயிலாக மாலை 4 மணிக்கு தகவல் தொழில் நுட்ப அணி, மாலை 5 மணிக்கு இளைஞரணி, மாலை 6 மணிக்கு மாணவரணி ஆலோசனை கூட்டம் எனது தலைமையிலும், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பிரபு கஜேந்திரன்,

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் டி.கே.பாபு, மாவட்ட தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆர்.ராஜா ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் எல்லோரும் நம்முடன் ஆன்லைன் உறுப்பினர் சேர்த்தல் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளதால் இளைஞரணி, மாணவரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்கள், துணை ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதி ஒருங்கிணைப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Tags : Video Consultative Meeting ,Announcement ,Avadi Nasser , Video Consultative Meeting: Announcement by Avadi Nasser
× RELATED காரைக்குடியில் 10 பைசாவுக்கு ‘கட்டிங்’ : சலூன்கடையில் நூதன அறிவிப்பு