×

கஞ்சா கடத்தியவர்கள் கைது

திருவள்ளூர்: திருவள்ளூர் தாலுகா போலீசார் காக்கலூர் எடை மேடை அருகே  வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஆந்திராவில் இருந்து 2 பைக்கில் வந்த வாலிபர்களை சந்தேகத்தின் பேரில் மடக்கி சோதனை செய்தனர். அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில்  கஞ்சா இருப்பது தெரியவந்தது. விசாரணையில் காக்கலூர் ஏரிக்கரை பகுதியை சேர்ந்த ரமேஷ்(29) மற்றும் அரவிந்தன்(22) என்பது தெரியவந்தது. இதனையடுத்து, அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவையும், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும், தப்பியோடிய ஏரிக்கரை பகுதியை சேர்ந்த அம்பேத், மணிகண்டன், சூர்யா ஆகிய 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இதேபோல், கடம்பத்தூர் - கசவநல்லூர் பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (23) என்பவர் தனது கையில் 120 கிராம் கஞ்சா வைத்திருந்ததால் அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்.

Tags : Cannabis smugglers , Cannabis smugglers arrested
× RELATED கஞ்சா புகைப்பதில் தகராறு வாலிபருக்கு...