×

கொரோனா பாதித்த ஏஎஸ்ஐக்கு இன்ஸ்பெக்டர் பிளாஸ்மா தானம்

புதுச்சேரி: புதுச்சேரி காவல் துறையில் மோட்டார் வாகன பிரிவில் ஓட்டுனராக பணிபுரியும் உதவி சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், கொரோனாவால் பாதிக்கப்பட்டார். காலாப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை மோசமானதால் பிளாஸ்மா சிகிச்சை அளிக்க டாக்டர்கள் முடிவு செய்தனர். இதற்காக, கொரோனா தொற்று ஏற்பட்டு குணமானவர்கள் பிளாஸ்மா தானம் வழங்கக்கோரி சமூக வலைதளத்தில் பதிவிட்டனர்.
இதனை அறிந்த, கொரோனா ஏற்பட்டு குணமடைந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் இனியன், காலாப்பட்டு தனியார் மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் சென்றார். அங்கு ஏஎஸ்ஐ சரவணனுக்காக பிளாஸ்மா தானம் செய்தார். இதற்காக ஏஎஸ்ஐ குடும்பத்தினர் மற்றும் மோட்டார் வாகன பிரிவு போலீசார் இன்ஸ்பெக்டருக்கு நன்றி தெரிவித்தனர். ஏஎஸ்ஐ உடல்நலம் தற்போது நன்கு முன்னேறிவிட்டது.

Tags : ASI , Inspector plasma donation to corona affected ASI
× RELATED கொரோனா தாக்கம் குறைந்தது எப்படி?