×

தனித்து நின்றாலும் 60 இடத்தில் வெற்றி நிச்சயம்: பாஜ மாநில தலைவர் நம்பிக்கை

விழுப்புரம்: தமிழ்நாட்டில் தனித்து நின்றாலும் 60 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெறுவோம் என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் முருகன் தெரிவித்தார். விழுப்புரத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தனியார் மண்டபத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாநில தலைவர் முருகன் நிருபர்களிடம் கூறுகையில், ரஜினி கட்சி ஆரம்பித்தால் வரவேற்போம். பாஜக கூட்டணிக்கு யார் வந்தாலும் அரவணைப்போம். தற்போது வரை என்டிஏ கூட்டணி தொடர்கிறது. மத்திய அரசு திட்டங்களை அதிக அளவில் பயன்படுத்திய மாநிலம் தமிழ்நாடு தான். பாஜக தமிழ்நாட்டில் தனித்து நின்றாலும் 60 இடங்களில் நிச்சயம் வெற்றி பெறும். பெரியாரின் நல்ல கொள்கையை ஏற்றுக்கொள்வோம். ஆனால் கடவுள் இல்லை என்பதை ஏற்க முடியாது என்றார்.


Tags : state president ,BJP , Standing alone is sure to win 60 seats: BJP state president confident
× RELATED பொறியியல் கலந்தாய்வில் ஆர்வம்...