×

அதிமுக பொதுச்செயலாளராக ஓபிஎஸ் நியமிக்கப்படுவாரா? சசிகலா வரட்டும் பார்க்கலாம்: வைத்திலிங்கம் எம்பி பேட்டி

தஞ்சை: சசிகலா ஜனவரி மாதம் விடுதலை ஆவாரா, வரட்டும் பார்க்கலாம் என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார். திருச்சி மண்டலம் தஞ்சை தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் தஞ்சையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், எம்பியுமான வைத்திலிங்கம் அளித்த பேட்டி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள விவசாய சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பிரதமர் கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து, ஜனவரி மாதம் சசிகலா விடுதலை ஆவாரா என நிருபர்கள் கேட்டபோது, உங்கள் கற்பனைக்கு எல்லாம் பதில் கூற முடியாது. வரட்டும் பார்க்கலாம் என்றார். ஓபிஎஸ் பொது செயலாளராக நியமிக்கப்படுவாரா என கேட்டதற்கு, கற்பனைக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்றார்.

Tags : OBS ,general secretary ,AIADMK ,Vaithilingam ,Sasikala , Will OBS be appointed AIADMK general secretary? Let's see Sasikala come: Interview with Vaithilingam MP
× RELATED மதுராந்தகம் அருகே பாஜக மாநில பொதுச் செயலாளர் கைது!