×

திருக்கழுக்குன்றத்தில் சாராயம் விற்ற 2 பெண்கள் கைது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் முத்திகை நல்லான்குப்பம் பகுதியில் தொடர்ந்து கள்ள சாராயம் விற்பதாக திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து இன்ஸ்பெக்டர் முனிசேகர் தலைமையில் எஸ்.ஐ. உஷாராணி மற்றும் போலீசார் அப்பகுதியில் சோதனைக்கு சென்றனர்.

அப்போது, வீட்டின் பின்புறம் சாராயம் விற்று கொண்டிருந்த மாரியம்மாள் (60) மற்றும் அவரது தம்பி மனைவி பாக்கியம் (35) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 105 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.Tags : 2 women arrested for selling liquor in Thirukkalukkunram
× RELATED திருவனந்தபுரத்தில் கள்ளச்சாராயம்...