×

ஐபிஎல்2020 டி20 போட்டி; பஞ்சாப் அணிக்கு 158 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது டெல்லி அணி

துபாய்: ஐபிஎல் 2020 துபாயில் கொரோனா காரணமாக எந்தவித ஆரவாரமின்றி தொடங்கியது. கொரோனா காரணமாக ரசிகர்கள் இல்லாமல் ஐபிஎல் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டாவது போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. இதில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் ராகுல் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இதனை தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 158 ரன்களை எடுத்தது. இதனை தொடர்ந்து 158 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு பஞ்சாப் அணி களமிறங்கவுள்ளது.

Tags : tournament ,IPL 2020 T20 ,Delhi ,Punjab , IPL 2020, Punjab team, 158 runs, win, Delhi team