நாடாளுமன்றம் அமளியால் பாதிக்கப்பட்டது கவலை அளிக்கிறது; அவையில் ஒழுக்கத்தை கடைபிடிப்பது எதிர்கட்சிகளின் கடமை: ராஜ்நாத் சிங் பேட்டி

டெல்லி: நாடாளுமன்றம் அமளியால் பாதிக்கப்பட்டது கவலை அளிக்கிறது என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். வரலாற்றில் இது போன்ற நிகழ்வுகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நடைபெற்றதில்லை என கூறினார். வேளாண் மசோதாக்களால் விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாகும் எனவும் கூறினார். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடர்ந்து கிடைக்கும் எனவும் கூறினார். நாட்டின் எப்பகுதிக்கும் சென்று விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்பனை செய்ய முடியும் என தெரிவித்தார். எதிர்கட்சியினர் கருத்தை கேட்க வேண்டியது அரசின் கடமை என கூறினார். எதிர்கட்சியினர் அவையில் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார். புரளியை பரப்பி விவசாயிகளை தவறாக வழிநடத்த முயற்சி செய்வதாக குற்றம்சாட்டினார். இன்று மாநிலங்களவையில் வேளாண் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாநிலங்களவையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

தாங்கள் கோரிய திருத்தங்களை ஏற்காமல் மசோதாக்களை நிறைவேற்றியதாக புகார் அளிக்கப்பட்டு போராட்டம் நடத்தப்பட்டது. மாநில அதிகாரத்துக்கு உட்பட்ட விவசாயத் துறையில் மத்திய அரசு தலையிடக் கூடாது என்று காங்கிரஸ் கட்சியினர் கண்டனம் தெரிவித்தனர். மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் விவசாயிகள் போராடி வருகின்றனர் என தெரிவித்தது. வேளாண் மசோதாக்கள் நிறைவேறிய நிலையில் மாநிலங்களவை நாளை காலை 9 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. வேளாண் மசோதாக்களுக்கு கண்டனம் தெரிவித்து மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>