108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள விரைவில் புதிய செயலி தொடங்கப்பட உள்ளது: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை: கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் தாக்குவதற்கு 99 சதவீதம் வாய்ப்பில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பதால் ஒவ்வொரு நாடும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் உள்ளது என கூறினார். இதற்கிடையே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு பக்க விளைவு ஏற்படுவதாகவும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சில இடங்களில் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது என்ற செய்தியும் வந்துள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா நோய் தாக்குவதற்கு 99 சதவீதம் வாய்ப்ப்பில்லை என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில் 108 ஆம்புலன்ஸ் வரும் தகவலை அறிந்து கொள்ள விரைவில் புதிய செயலி தொடங்கப்பட உள்ளது. கொரோனா வைரசுக்கு தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளிக்க அஞ்சிய போது அரசு மருத்துவமனை மருத்துவர்கள்தான் சிகிச்சை அளித்தனர். கொரோனாவுக்கு மட்டுமல்ல, எல்லா நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர். தமிழக முதல்வர் டாக்டர்களுக்கு உரிய நேரத்தில் உரிய கவுரவத்தை வழங்குவார் என்று கூறினார்.

Related Stories: