×

வாட்ஸ்அப் மூலம் லாட்டரி சீட்டு விற்றவர் கைது

வேளச்சேரி: சென்னை அடையாறு போலீசார் தரமணி 100 அடி சாலை பகுதியில் ஒரு ஓட்டலின் அருகே  சந்தேகப்படும்படி பைக்கில் நீண்ட நேரமாக  நின்றவரை பிடித்து விசாரித்தனர். அவர் வேளச்சேரி சரஸ்வதி நகரைச் சேர்ந்த பெருமாள் (46) என தெரியவந்தது. அவர்,  தமிழகத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை கேரளாவில் இருந்து வாட்ஸ்அப் மூலம் வாங்கி இங்கு விற்பனை செய்வதும், இவரிடம் லாட்டரி சீட்டுகள் வாங்க வரும் வாடிக்கையாளர்களுக்காக காத்து நின்றதும் தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார்  2 செல்போன், ரூ.8 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் பைக் ஆகியவற்றை  பறிமுதல் செய்தனர்.

Tags : Lottery ticket seller , WhatsApp, lottery ticket, arrest
× RELATED பணியில் இறந்த போலீசின் மகனுக்கு...