காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும்; வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

சென்னை: காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிக கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் வெப்பச்சலனம், காற்றழுத்த மேலடுக்கு, கீழடுக்கு காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் வடகிழக்கு வங்கக் கடலில் இன்று குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது; வடகிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளது.

இதனால் நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யவும், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் அதிகளவில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக உருமாறும் அளவிற்கு வீரியம் கொண்டது இவ்வாறு வானிலை ஆய்வு மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

Related Stories: