உலகளவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 2.25 கோடியாக உயர்வு: இதுவரை 9.61 லட்சம் பேர் பலி; 61,392 பேர் கவலைக்கிடம்.!!!!

ஜெனீவா:சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்/ பிரதேசங்களுக்கு பரவி  பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள்  அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் 3 கோடியே 09 லட்சத்து 81 ஆயிரத்து 818 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர்களில் 74 லட்சத்து 38 ஆயிரத்து 486  பேர் சிகிச்சை பெற்று வருகிறனர். சிகிச்சை பெறுபவர்களில் 61 ஆயிரத்து 392 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வைரஸ் பாதிப்பில் இருந்து 2 கோடியே 25 லட்சத்து 82 ஆயிரத்து 000 பேர்  குணமடைந்துள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 9 லட்சத்து 61 ஆயிரத்து 332 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

                                

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,398,230 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 86,774  ஆக அதிகரித்துள்ளது.  இந்தியாவில் 4,299,724 பேர் குணமடைந்தனர்.

                                  

* அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 203,824 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,967,403 ஆக அதிகரித்துள்ளது. 4,223,693 பேர்  குணமடைந்தனர்.

                               

* பிரேசிலில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 136,565 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,528,347 ஆக அதிகரித்துள்ளது. 3,820,095 பேர்  குணமடைந்தனர்.

                                 

* ரஷ்யாவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 19,339 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,097,251 ஆக அதிகரித்துள்ளது. 906,462 பேர்  குணமடைந்தனர்.

                               

* பெருவில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 31,369 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 762,865 ஆக உயர்ந்துள்ளது. 607,837 பேர் குணமடைந்தனர்.

                 

* ஸ்பெயினில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 30,495 ஆக அதிகரித்துள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை  659,334 ஆக அதிகரித்துள்ளது.

                                 

* ஈரானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 24,118  ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 419,043 ஆக அதிகரித்துள்ளது. 357,632 பேர் குணமடைந்தனர்.

             

* பிரிட்டனில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 41,759 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 390,358 ஆக உயர்ந்துள்ளது.

                               

* பங்களாதேஷ் நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 4,913 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 347,372 ஆக அதிகரித்துள்ளது. 254,386  பேர் குணமடைந்தனர்.

                                       

* பாகிஸ்தானில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 6,415 ஆக அதிகரித்துள்ளது. பிரேசிலில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 305,031 ஆக அதிகரித்துள்ளது. 292,044 பேர்  குணமடைந்தனர்.

                                    

* இத்தாலியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 35,692 ஆக அதிகரித்துள்ளது. இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 296,569 ஆக உயர்ந்துள்ளது. 217,716 பேர்  குணமடைந்தனர்.

                                    

* ஜெர்மனியில் கொரோனாவால் உயிரிழந்தோர்களின் எண்ணிக்கை 9,466 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 272,308 ஆக அதிகரித்துள்ளது. 243,500 பேர்  குணமடைந்தனர்.

Related Stories:

>