பைக் விபத்தில் வாலிபர் பலி

பூந்தமல்லி: மாங்காட்டை சேர்ந்தவர் மணிகண்டன் (25).  தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். மவுண்ட் - பூந்தமல்லி சாலை போரூர் அருகே சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே திடீரென மாடு ஒன்று வந்தது. அப்போது மாட்டின் மீது பைக் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில், மணிகண்டனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார்.    

Related Stories:

>