நூதன முறையில் வழிப்பறி

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த கீழ்நல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகாமி (40). இவர் நேற்று முன்தினம் காலை இவரது வீட்டுக்கு வந்த ஆசாமி ஒருவர் குடிக்க தண்ணீர் கேட்டார்.  சிவகாமி தண்ணீர் கொண்டு வந்து கொடுப்பதற்குள் அந்த ஆசாமி அங்கிருந்து மாயமானார். இதனால் சந்தேகமடைந்த சிவகாமி உள்ளே சென்று பார்த்தபோது குளிர்சாதன பெட்டியின் மீது வைத்திருந்த செல்போன் காணாமல் போனது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின்பேரில் மணவாள நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ராமச்சந்திரன் என்பவரை கைது செய்து அவரிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

Related Stories: