சினிமா பாணியில் சூதாட்டம்

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் பல இடங்களில் காட்டன் சூதாட்டம் நடைபெறுவதாக எஸ்பி அரவிந்தனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சப்-இன்ஸ்பெக்டர் சுரேந்திரகுமார் தலைமையிலான மாவட்ட சிறப்பு படையினர் நேற்று மாலை கும்மிடிப்பூண்டி பகுதியில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, பஜார் பகுதியின் பல இடங்களில் நடிகர் சூர்யா பட பாணியில் காட்டன் சூதாட்டம்  நடந்தது.

இதையடுத்து, சூதாட்டத்தில் ஈடுபட்ட கோட்டக்கரை பகுதியை சேர்ந்த தனபால் (48).  வசந்த பஜார் விஜயகுமார் (36). பாரதிதாசன் தெரு பாசம்மாள் (45). பிள்ளையார் கோவில் தெரு செல்வி (35). அண்ணாநகர் விஜயா (52). மிளகாய் செட்டி குளம் குண்டுதுரை (65). மணியகார தெரு கோவிந்தசாமி(60) ஆகிய 7 பேரை கைது செய்து  அவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் மற்றும் ₹8,570 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Related Stories:

>