கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

ஆவடி: ஆவடி மாநகர சி.பி.எம், சி.பி.ஐ ஆகிய கட்சிகள் சார்பில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். கொரோனா தொற்றால் பாதித்தவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக்கோரி ஆவடி மாநகர சி.பி.எம், சி.பி.ஐ சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் ஆவடி மாநகராட்சி அலுவலகம் அருகில் நேற்று நடந்தது. இதில் சி.பி.எம் மாநகர செயலாளர் ஆர்.ராஜன் தலைமை தாங்கினார்.

சிபிஐ மாநகர செயலாளர் எஸ்.மயில்வாகனன் தொடங்கி வைத்தார். இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். ரயில்வே, நிலக்கரி, சுரங்கம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது மற்றும் தொழிலாளர் விரோத போக்கை கைவிட வேண்டும்.  தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை உடனடியாக வழங்கவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

Related Stories:

>