×

செய்யூர் அருகே பயங்கர சம்பவம்; அதிமுக பிரமுகர் சரமாரி வெட்டி கொலை: அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா? விசாரணை

செய்யூர்: செய்யூர் தாலுகா இடைக்கழிநாடு பேரூராட்சி, கோளவாக்கம் பகுதியை சேர்ந்தவர் கோவை செல்லப்பன். இவரது மகன் அரசு (எ) ராமச்சந்திரன் (40). இடைக்கழிநாடு பேரூராட்சி முன்னாள் அதிமுக துணை தலைவர். பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து சாலைகளையும், டெண்டர் எடுத்து, சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். திருமணம் ஆகாத செல்லப்பன், முழுநேர அரசியலில், தீவிரமாக ஈடுபட்டு வந்தார். பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்ததால், அவருக்கு பொதுமக்கள் இடையே மதிப்பும், மரியாதையும் இருந்தது. அடுத்து வரும் உள்ளாட்சி தேர்தலிலும், அவர் போட்டியிட இருந்ததாக தெரிகிறது. இதனால், ஆளுங்கட்சியினருக்கு காழ்ப்புணர்ச்சி ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், நேற்று மாலை செல்லப்பன், கடப்பாக்கத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக கோளவாக்கத்துக்கு தனது பைக்கில் சென்றார். அங்கு கட்சி நிர்வாகிகளுடன் பேசினார். பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரை  பின் தொடர்ந்து பைக்கில் வந்த மர்மநபர்கள் சிலர், செல்லப்பனை மறித்து, சரமாரியாக அரிவாளால் வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடிவந்தனர். அதை பார்த்ததும், மர்மநபர்கள் தப்பிவிட்டனர். இதில், உடல் முழுவதும் பலத்த வெட்டு காயங்கள் ஏற்பட்ட அவர், உயிருக்கு போராடினார். உடனடியாக அவரை மீட்ட பொதுமக்கள், மரக்காணம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால் அவர், செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் 300க்கு மேற்பட்டோர், கிழக்கு கடற்கரை சாலை, கடப்பாக்கம் பகுதியில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அதிமுக பிரமுகர் செல்லப்பனை கொலை செய்தவர்களை, உடனடியாக கைது செய்ய வேண்டும் என கோஷமிட்டனர். தகவலறிந்து, சூனாம்பேடு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம், சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, கொலையாளிகளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர்.

இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். பின்னர், சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோனைக்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார், வழக்குப்பதிவு செய்து, தொழில் போட்டியில் செல்லப்பன் ெகாலை செய்யப்பட்டரா, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமா என தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : incident ,death ,AIADMK ,Seyyur ,Investigation , Terrible incident near Seyyur; AIADMK leader hacked to death: Is it due to political turmoil? Investigation
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...