பைக்கில் சாராயம் கடத்திய பெண் உள்பட 4 பேர் கைது

திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் பரமசிவன் நகர் சுடுகாடு பகுதி, அம்மணம்பாக்கம் ஏரிக்கரை, ஒரகடம் காடு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து  பைக்குகளில் சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்வதாக, திருக்கழுக்குன்றம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர்   முனிசேகர், எஸ்ஐக்கள் உஷாராணி, வாசுதேவன் மற்றும் போலீசார், நேற்று மேற்கண்ட பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதியில் 2 பைக்கில் பெண் உள்பட 4 பேர் வந்தனர். அவர்களை, மறித்து போலீசார் சோதனை செய்தபோது, சாராயம் கடத்தி வந்தது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை காவல் நிலையம் கொண்டு சென்று தீவிரமாக விசாரித்தனர். அதில், பரமசிவன் நகரை சேர்ந்த உதயகுமார் (32), அஜய் (22),திருக்கழுக்குன்றம் ஆசிரியர் நகர் குப்பம்மாள் (65), அவரது மகன் டில்லிபாபு (38) என தெரிந்தது. அவர்களிடம் இருந்து அவர்களிடமிருந்து 210 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், சாராய கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அவர்களது கூட்டாளிகள் ஜோதிலட்சுமி,  தமிழரசு, கிள்ளிவளவன், சேகர் ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் அருகே தாமல் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (40). டெய்லர். நேற்று காலை வெங்கடேசன், வேலை விஷயமாக, தனது பைக்கில் காஞ்சிபுரம் சென்றார். அங்கிருந்து மதியம் தாமல் கிராமத்துக்கு புறப்பட்டார்.

தாமல் அருகே சென்றபோது, எதிரே பைக் மீது, வெங்கடேசன் பைக் நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன், சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு பைக்கில் வந்த 2 பேர் படுகாயமடைந்தனர்.

புகாரின்படி பாலுச்செட்டி சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், படுகாயமடைந்தவர்கள் திருவண்ணாமலை மாவட்டம் சங்கரன் பாடி கிராமத்தை சேர்ந்த செல்வம் (40), அவரது நண்பர் உதயகுமார் (40) என தெரிந்தது. தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

* காஞ்சிபுரம் சாலை தெருவில் சூப்பர் மார்க்கெட் நடத்தும் சகோதரர்கள் ஸ்ரீராம், பாலகுமரன் ஆகியோர் காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதியில் மளிகை கடை நடத்துகின்றனர். இவர்கள், கடந்த சில மாதங்களுக்கு முன், காஞ்சிபுரம் தும்பவனம் அருணாசலம் தெருவில் ₹28 லட்சத்தில் 4200 சதுர அடி காலி மனை வாங்கினர். இதையறிந்த காஞ்சிபுரம் மறைந்த பிரபல ரவுடி ஸ்ரீதரின் கூட்டாளிகள் தியாகு , தினேஷ் ஆகியோர், நில உரிமையாளர்களிடம் ₹10 லட்சம் கேட்டு மிரட்டினர். அவர்களுடன், ரவுடிகள் சங்கர், குட்டி ஆகியோரும் இணைந்து, அவர்களுக்கு ₹10 லட்சம் கேட்டு மிரட்டினர். மேலும், பணம் கொடுக்காவிட்டால், வாங்கிய சொத்தை அனுபவிக்க முடியாது. போலீசில் புகார் செய்தால், உங்கள் குடும்பம் உயிரோடு இருக்காது என மிரட்டினா்ர்.

அதேபோல் செங்கல்பட்டு மாவட்டம் மண்ணிவாக்கத்தில் சந்திரசேகர், செல்வராஜ் ஆகியோர் வாங்கிய நிலத்தை, ரவுடி போகி கிருஷ்ணன், போலி பத்திரம் தயாரித்து, ₹1 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால் கொலை செய்வதாக மிரட்டினர்.

இதுகுறித்து, பாரதிய வியாபாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் சுதாகர், காஞ்சிபுரம் சரக டிஜஜி சாமூண்டிஸ்வரியிடம் புகார் மனு அளித்தார். புகாரின்படி எஸ்பி சண்முகபிரியா தலைமையில், தனிப்படையினர்,  வியாபாரிகளை மிரட்டிய பழத்தோட்டம் தமிழரசன் (50), திம்மசமுத்திரம் மாரியம்மன் கோயில் சத்தியசீலன் (42), வடகால் திருவீதி அம்மன் கோயில் தெரு ஜெய்சங்கர் (55) ஆகியோரை கைது செய்தனர்.

* பெரும்புதூர்:  படப்பை அருகே நாட்டரசன்பட்டு ஊராட்சி, வடமேல்பாக்கம் கிராமம், பெரியார் தெருவை சேர்ந்தவர் விநாயகம் விவசாயி. இவரது மகன் கீர்த்திவாசன் (12). காட்டாங்கொளத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தான். இந்நிலையில், நேற்று காலைக்கடன் முடிக்க, அங்குள்ள மாந்தோப்புக்கு கீர்த்திவாசன் சென்றான். அங்கு செடி, கொடிகளுடன் கூடிய பாழடைந்த மின்கம்பம் இருந்தது. நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், அப்பகுதி முழுவதும் சேறும் சகதியுமாக இருந்தது. இதனால், புதர் பகுதியில் இருந்த கொடியை பிடித்தபடி கீர்த்திவாசன், சேற்றை தாண்ட முயன்றான். அப்போது, அதில் இருந்த மின்வயர் மூலம் மின்சாரம் பாய்ந்து சிறுவன் தூக்கி வீசப்பட்டான். சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அங்கு கீர்த்திவாசன், சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து மணிமங்கலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பெரும்புதூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: