வாலாஜாபாத் ரவுண்டானாவின் 4 திசைகளிலும் அறிவிப்பு பலகைகள் இல்லாத சாலைகள்: வாகன ஓட்டிகள் குழப்பம்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் பேரூராட்சியின் 15 வார்டுகளில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். வாலாஜாபாத்தை சுற்றி 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்குள்ள ஆயிரக்கணக்கான மக்கள் வாலாஜாபாத் பஸ் நிலையம், காவல் நிலையம், வங்கிகள், ஒன்றிய அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்பட பல்வேறு அரசு மற்றும் தனியார் அலுவலகங்களுக்கு தினமும் வந்து செல்கின்றனர். வாலாஜாபாத் ரவுண்டானாவின் 4 திசைகளிலும் சாலைகள் அமைந்துள்ளன. இந்த சாலைகளில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. வாலாஜாபாத் போலீசார் இந்த ரவுண்டானா உள்ள பகுதியின் 4 திசைகளிலும் பேரிகார்டு வைத்துள்ளனர்.

இதுபோல், ரவுண்டானாவை சுற்றி பேரிகார்டு வைத்துள்ளதால், காஞ்சிபுரம், செங்கல்பட்டு செல்பவர்கள் எந்த திசையில் செல்வது என தெரியாமல் விழி பிதுங்கி தவிக்கின்றனர். இதனால், காலை மற்றும் மாலை நேரங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், பொதுமக்கள் கடும் சிரமம் அடைகின்றனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், பெரும்புதூரில் இருந்து காஞ்சிபுரம் செல்லும் வாகனம் எங்கு திரும்ப வேண்டும், காஞ்சிபுரத்தில் இருந்து செங்கல்பட்டு செல்லும் வாகனம் எப்படி செல்ல வேண்டும் என எவ்வித அறிவிப்பு பலகைகளும் இங்கு வைக்கவில்லை.

குறிப்பாக, அந்த பகுதியில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்துவதற்கும், வாகனங்களை ஒழுங்குபடுத்துவதற்கு போலீசார் பணியில் இருப்பது இல்லை. இதையொட்டி இந்த பகுதியில் அதிகளவில் போக்குவரத்து நெரிசலும், விபத்துக்களும் ஏற்படுகின்றன. இதில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாலாஜாபாத் ரவுண்டானாவின் 4 முனைகளிலும் போக்குவரத்து–்குகு ஏற்ப அறிவிப்பு பலகைகள் அமைக்க வேண்டும். போலீசாரை பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்றனர்.

Related Stories:

>