காஞ்சிபுரம் - பொன்னேரிக்கரை இடையே ரயில்வே மேம்பாலப் பணி கலெக்டர் ஆய்வு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் சென்னை - பொன்னேரிக்கரை பகுதியில் நடக்கும்ரயில்வே மேம்பால பணிகளை கலெக்டர் பொன்னையா ஆய்வு செய்தார். காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகில் சென்னை - பொன்னேரிக்கரை பகுதியில் ₹50.78 கோடியில் மேம்பால பணி நடந்து வருகிறது. கடந்த 2017 மாதம்,அடிக்கல் நாட்டப்பட்டு, 66 தூண்களுடன் 70 தளங்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நெடுஞ்சாலை துறையினரால் ரயில்வே பகுதிக்கு அருகில் உள்ள இரு தளங்களை தவிர மீதமுள்ள அனைத்து பகுதிகளிலும் 90 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.

ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகளை கலெக்டர் பொன்னையா, நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர், செய்தியளார்களிடம் கூறுகையில், ரயில்வே மேம்பாலத்தின் மீதிபணிகளை விரைந்து முடித்து, 2020க்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், சப் கலெக்டர் சரவணன், காஞ்சிபுரம் வட்டாட்சியர் பவானி, செங்கல்பட்டு உட்கோட்ட உதவி கோட்ட பொறியாளர் தர், நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் பெரியண்ணன் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: