தமிழக காங்கிரசில் விளையாட்டு துறை தலைவர் நியமனம்

சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு காங்கிரஸ் விளையாட்டுத்துறை தலைவராக பெரம்பூர் நிசார் நியமனம் செய்யப்படுகிறார். இவர் 1991ல் தேசிய குத்துச் சண்டை வீரராக திகழ்ந்தவர். தமிழ்நாடு குத்துச் சண்டை கழகத்தின் துணைத் தலைவராகவும், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் அமைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார். விளையாட்டுத் துறையில் ஆர்வம் உள்ள காங்கிரஸ் கட்சியினரும், மற்றவர்களும் பெரம்பூர் நிசாருக்கு முழு ஒத்துழைப்பு வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

Related Stories:

>