இடுப்பு எலும்பு முறிவுக்கு அறுவை சிகிச்சை: ஸ்டான்லி அரசு மருத்துவமனை சாதனை

தண்ைடயார்பேட்டை: விபத்தில் சிக்கி இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்ட 2 வாலிபர்களுக்கு வெற்றிகரமாக  அறுவை சிகிச்சை செய்துள்ளதாக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை டீன் பாலாஜி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நடந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது  அவர் கூறியதாவது: சென்னையை சேர்ந்த சரவணன் (29) சாலை விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதேபோல், காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரகாஷ் (24) சாலை விபத்தில் இடுப்பு எலும்பு முறிவு ஏற்பட்டு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இருவருக்கும் எலும்பு மற்றும் முடநீக்கியல் துறை தலைவர் பேராசிரியர் தொல்காப்பியன் ஆலோசனைப்படி டாக்டர் அசோகன் தலைமையில் எலும்பு முறிவு அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர்கள் கொண்ட குழுவினர் 2 கட்டங்களாக 3 மணி நேரம் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்தனர்.

தனியார் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சைக்கு இருவருக்கும் தலா ₹15 லட்சம் வரை செலவாகி இருக்கும். இந்த அறுவை சிகிச்சையை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். உடன் மருத்துவமனை நிலைய அதிகாரி ரமேஷ் மற்றும் பேராசிரியர்கள் இருந்தனர்.

Related Stories:

>