×

ஆன்லைனில் படிக்க செல்போன் பறித்த சிறுவன்

சென்னை: மணலி சாலை, கான்கார்டு பேருந்து நிறுத்தம் அருகே நின்ற லாரி ஓட்டுநர் அழகு முருகனிடம் கடந்த 9ம்தேதி 3 பேர் செல்போனை பறித்துக் கொண்டு ஓடினர். அவர்களை பொதுமக்கள் பிடித்து திருவொற்றியூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்டதில் ஒருவன் சிறுவன். அவனிடம் போலீஸ் அதிகாரிகள் விசாரித்ததில், சிறுவன் ஆன்லைன் கல்விக்காக செல்போன் பறித்ததாக தெரிவித்துள்ளான்.

எனவே, அவனை நல்வழிப்படுத்தும் வகையில் திருவொற்றியூர் குற்றப்பிரிவு ஆய்வாளர் புவனேஸ்வரி சிறுவனை பெற்றோருடன் அழைத்து, அவனுக்கு ஆண்ட்ராய்டு செல்போன் பரிசளித்து அறிவுரை வழங்கி அனுப்பினார்.

Tags : The boy who stole the cell phone to read online
× RELATED சென்னையில் செல்போன் சார்ஜ் போட்ட சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு