×

சொல்லிட்டாங்க...

புதிய கல்விக் கொள்கையை 21ம் நூற்றாண்டின் தேவைக்கேற்ப மத்திய அரசு மாற்றி அமைத்துள்ளது. சமத்துவமும், துடிப்புமிக்க அறிவாற்றல் கொண்ட சமூகமும் இதனால் உருவாகும்.
- ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்

பயனாளர் கட்டணம் என்ற பெயரில் மறைமுக கட்டண உயர்வை நடைமுறைப்படுத்தினால்  ரயில் சேவை என்பது ஏழைகள், நடுத்தர மக்களுக்கு எட்டாக்கனியாகி விடும்.
- பாமக நிறுவனர் ராமதாஸ்

மத்திய பாஜ அரசின் கொள்கைகளை பாஜவை விட தீவிரமாக அமல்படுத்தும் கட்சியாக அதிமுக மாறியுள்ளது.
- மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

கட்சியின் நிலைப்பாடு குறித்து கருத்து சொல்ல தடை போடப்பட்டுள்ளது. அமைச்சரான நானும், தலைமையின் உத்தரவை மீறி அடித்து கேட்டாலும் கருத்து சொல்லமாட்டேன்.
- அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

Tags : Ramnath Govind, Ramdas, Balakrishnan, RP Udayakumar
× RELATED நாட்டு மக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தசரா நல்வாழ்த்து...