×

பாஜ பிரமுகர் கொலையில் 7 வாலிபர்கள் கைது

தேன்கனிக்கோட்டை: கிருஷ்ணகிரி மாவட்டம், குந்துமாரணப்பள்ளி பகுதியைசேர்ந்தவர்  ரங்கநாத்(35). தனியார் பள்ளி பஸ் டிரைவரான இவர் ஒன்றிய பாஜ இளைஞரணி தலைவராக இருந்து வந்தார். கடந்த 15ம் தேதி இரவு இவர் வீட்டில் இருந்தபோது, 9 இளைஞர்கள் வந்து வெட்டி கொலை செய்தனர்.இந்த சம்பவத்தில், சேலத்தில் பதுங்கியிருந்த தமிழரசன்(29), அம்ரீஷ்(29) உள்ளிட்ட 7 பேரை நேற்று கைது செய்தனர்.விசாரணையில், வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர்கள், தெருவில் கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடி உள்ளனர். அங்கு நடந்த தகராறில் ரங்கநாத், இளைஞர்களுக்கு ஆதரவாக பேசியதால் அவரை கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

Tags : youths ,BJP , 7 youths arrested for killing BJP leader
× RELATED காரைக்காலில் பைக்குகள் திருடிய...