×

மயக்க ஸ்பிரே அடித்து மாணவி பலாத்காரம்: வேலூரில் கல்லூரி மேலாளர் கைது

வேலூர்: வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது இளம்பெண். இவர் கே.வி.குப்பத்தில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் 2ம் ஆண்டு டிப்ளமோ படித்து வருகிறார். கடந்த 16ம் தேதி இளம்பெண் உடல்நலக்குறைவு காரணமாக வடுகந்தாங்கல் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்றுள்ளார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், 7 மாத கர்ப்பமாக இருப்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து  வேலூர் மாவட்ட சமூக நல அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் பெண்களுக்கான ஒருங்கிணைந்த சேவை மைய நிர்வாகி பிரியங்கா சென்று விசாரணை நடத்தினார்.

அப்போது மாணவி கூறுகையில், ‘கடந்த மார்ச் மாதம் கல்லூரிக்கு ரெக்கார்டு நோட்டு கொண்டு வருமாறு தந்தையின் செல்போனில் பேசியவர் தெரிவித்தார். அதன்பேரில் கல்லூரிக்கு புறப்பட்டு சென்றபோது வழியில் வடுகந்தாங்கல் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் அடையாளம் தெரியாத நபர் திடீரென முகத்தில் மயக்க ஸ்பிரே அடித்தார். இதில் மயக்கமடைந்த நான், சில மணி நேரம் கழித்து விழித்து பார்த்தபோது, பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தேன். அருகில் கல்லூரி ஊழியர் ஒருவர் இருந்தார். அவர் இதுபற்றி வெளியில் சொன்னால், கொன்று விடுவதாக மிரட்டினார்.

இதனால் நடந்ததை எனது பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை’ என்றார். இது குறித்து அனைத்து மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதுகுறித்து டிஎஸ்பி திருநாவுக்கரசு கூறுகையில், ‘மாணவியை ரெக்கார்டு நோட்டு எடுத்துவரச்சொல்லி அழைத்து, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அதே கல்லூரியில் பணிபுரியும் மேலாளரான பிரதாப்(25) என்பவரை நேற்று கைது செய்துள்ளோம்’ என்றார்.

Tags : College manager ,Vellore , College manager arrested in Vellore
× RELATED வேலூர் அருகே மின்வாரிய உதவி செயற்பொறியாளர் லஞ்சம் வாங்கியபோது கைது