×

அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் தி.மு.கவில் இணைந்தார்

கோபி: பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பன் தி.மு.க.வில் இணைந்தார். தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகனும், தமிழ்நாடு மருந்து பொருள் விற்பனை சங்க செயலாளருமான கே.கே.செல்வம் 2 நாட்களுக்கு முன் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார். நேற்று அவர் கோபி குள்ளம்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு வந்தார். அவருக்கு  தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்தநிலையில் அமைச்சரின் அண்ணன் கே.ஏ.காளியப்பனும் ஈரோடு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார்.

நிகழ்ச்சியில் நகர செயலாளர் நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் சிறுவலூர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதுபற்றி கே.கே.செல்வம் கூறும்போது, ‘‘தமிழக அரசின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் சிறப்பான ஆட்சியை தருவார் என்ற நம்பிக்கை அனைவரது மனதிலும் உள்ளது. கட்சி தலைமை விருப்பப்பட்டால் கோபியில் போட்டியிடுவேன்’’ என்று கூறினார். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனின் அண்ணன் மற்றும் அவரது மகன் ஆகியோர் அடுத்தடுத்து தி.மு.க.வில் இணைந்ததற்கு தொண்டர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags : Senkottayan ,DMK , Minister Senkottayan's brother joined the DMK
× RELATED பள்ளிகள் திறப்பதற்கு தற்போது...