மருத்துவ பணியாளர்களை தாக்கினால் 5 ஆண்டுகள் சிறை; 2 லட்சம் அபராதம்: மாநிலங்களவையில் மசோதா நிறைவேறியது

புதுடெல்லி: மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் சுகாதாரப் பணியில் இருப்பவர்களைப் பாதுகாக்கும் புதிய மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொற்றுநோயைக் கட்டுப்படுத்த 1897-ம் ஆண்டு ‘தொற்றுநோய்ப் பரவல் சட்டம்’ கொண்டு வரப்பட்டது. நாடு சுதந்திரம் அடைந்த பிறகு இந்த சட்டத்தில் அவ்வப்போது தேவையான திருத்தங்கள் மேற்கொண்டு வரப்பட்டது. கொரோனா பரவியபோது, இச்சட்டத்தின் அடிப்படையிலேயே பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. இந்நிலையில், கொரோனா பணியில் ஈடுபட்ட மருத்துவ பணியாளர்கள் மீது நாட்டின் பல பகுதிகளில் தாக்குதல்கள் நடந்தன.

மருத்துவமனை உடமைகளும் நோயாளிகளின் உறவினர்களால் சேதப்படுத்தப்பட்டன. இதையடுத்து, மருத்துவ பணியாளர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் வகையில் சட்ட த்  திருத்தம் கொண்டு வரப்படும் என்று மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது. அதன்படி, ‘தொற்றுநோய் தடுப்பு சட்டத் திருத்த மசோதா 2020’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்ட புதிய மசோதாவை கடந்த 14ம் தேதி மக்களவையில் மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தாக்கல் செய்தார். இது, ேநற்று மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டது.

மசோதாவின் முக்கிய அம்சங்கள் வருமாறு:

* சுகாதாரப் பணியிடங்களில்  ஏற்படுத்தப்படும் சேதங்களுக்கு புதிய அபராதம்  வசூலிக்கப்படும்.

* குற்றம் நிரூபிக்கப்பட்டால் ரூ.50,000 -  ஆயிரம் முதல் ரூ.2 லட்சம்  வரை அபராதம் விதிக்கப்படும்.

* சுகாதார பணியாளர்கள் தாக்கப்பட்டால், அது பற்றி 30 நாட்களுக்குள் விசாரணையை முடித்து  அறிக்கையைத் தாக்கல் செய்வார். வழக்கு ஒரு வருடத்துக்குள் முடியும்.

* குற்றம் நிரூபிக்கப்பட்டால் 3 மாதங்களில் இருந்து 5 ஆண்டுகள் வரையிலும் தண்டனை விதிக்க முடியும்.

குற்றங்கள் குறையும்

புதிய சட்டத்திருத்தம் குறித்து அமைச்சர் ஹர்ஷவர்தன் கூறுகையி்்ல், ‘சுகாதாரப் பணியாளர்கள் தாக்கப்பட்டாலோ, பின் தொடரப்பட்டாலோ அவர்கள் மன உறுதியை இழந்துவிடுகிறார்கள். அவர்களைப் பாதுகாக்க அரசாங்கம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். இந்த புதிய சட்டத்திருத்தம் பற்றிய விழிப்புணர்வும் சுகாதாரப்பணியாளர்களிடம் ஏற்பட வேண்டும்,’’ என்றார்.

Related Stories: