×

நியூயார்க்கில் துப்பாக்கிச்சூடு: 2 பேர் பலி

நியூயார்க்: நியூயார்க்கில் விருந்து நிகழ்ச்சியின் போது மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். அமெரிக்காவின் நியூயார்க்கின் ரோஷ்டர் பகுதியில் வீடு ஒன்றில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது, நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் ஒருவர் தான் மறைத்து கொண்டு வந்திருந்த துப்பாக்கியின் மூலம் கூட்டத்தில் இருந்தவர்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.

இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் 14 பேர் காயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அங்கு விரைந்தனர் இறந்தவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டது. மேலும், காயமடைந்தவர்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : Shooting ,New York , Shooting in New York: 2 killed
× RELATED கெடுபிடி கட்டுப்பாடுகள் எதிரொலி:...