×

ஆக்ஸ்போர்டு தடுப்பூசி 3ம் கட்ட பரிசோதனை அடுத்த வாரம் தொடங்கும்

புனே: ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தால் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியின் மூன்றாவது கட்ட மனித பரிசோதனை அடுத்த வாரம் புனேவில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. புனே அரசு பொது மருத்துவமனை தலைவர் முரளிதர் தாம்பே கூறுகையில், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டு சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கொரோனா தடுப்பூசியான ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியின் மூன்றாவது கட்ட பரிசோதனை அடுத்த வாரம் மருத்துவனையில் தொடங்குகிறது. திங்களன்று இந்த சோதனை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பரிசோதனைக்காக ஏற்கனவே பல தன்னார்வலர்கள் முன்வந்துள்ளனர்.

சுமார் 150 முதல் 200 தன்னார்வலர்கள் தடுப்பூசி மருந்து பரிசோதனைக்காக பயன்படுத்தப்படுவார்கள். இதற்கான பெயர் பதிவை மருத்துவமனை தொடங்கியுளள்து. விருப்பமுள்ள தன்னார்வலர்கள் மருத்துவமனையை அணுகவும்” என்றார்.
ஆக்ஸ்போர்டு ஆஸ்ட்ராசெனகா நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்து பரிசோதனையில் பங்கேற்றவர்களுக்கு கடுமையான பக்க விளைவுகள் ஏற்பட்டதை அடுத்து இறுதி கட்ட பரிசோதனை நிறுத்தும்படி இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு மையமானது கடந்த 11ம் தேதி அறிவித்தது. எனினும், கடந்த 15ம் தேதி சீரம் இன்ஸ்டியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தடுப்பூசி பரிசோதனைக்கு அது அனுமதி அளித்தது குறிப்பிடத்தக்கது.Tags : Phase ,testing ,Oxford , Oxford Vaccine Phase 3 Test: Beginning next week
× RELATED பீகார் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல் கட்ட பிரச்சாரம் இன்றுடன் நிறைவு