திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசன டிக்கெட் இல்லாமல் வந்த பக்தர்களுக்கு அனுமதி மறுப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு டிக்கெட் இல்லாமல் வந்த பக்தர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். இதில் உள்ளூர், வெளியூர், வெளிமாநில பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வருடாந்திர பிரமோற்சவம் நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும், புரட்டாசி  மாதத்தின் முதல் சனிக்கிழமை என்பதால் தமிழகத்தில் இருந்து அதிக அளவு பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம்.

இதனை கருத்தில் கொண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரூ300 சிறப்பு தரிசன டிக்கெட் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே திருமலைக்கு அனுமதிக்கப்படுவர் என கடந்த வாரம் அறிவித்தது. இதனை அறியாத தமிழகம், ஆந்திரா,  கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்தனர். ஆனால்,  அலிபிரி சோதனை சாவடி அருகே அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, டிக்கெட் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: